குடியாத்தத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 மது பாட்டில்கள் பறிமுதல்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம், தமிழக சட்டசபை  தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய  பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் தாலுக்கா காவல் ஆய்வாளர். ராஜேஷ் கண்ணா தலைமையில் செட்டிகுப்பம் பகுதியில் விஜயலட்சுமி (54) என்பவர் வீட்டில்  பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் 370 பீர் பாட்டில்கள் மற்றும் 830 குவாட்டர் பாட்டில்கள் மேலும் இதைக் குறித்து விஜயலட்சுமி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!