100 டிராக்டர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேபெருமருதூர் கடைவீதியில் நூறுக்கும் மேற்பட்ட டிராக்டர் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு பத கைகள் ஏந்திஅறந்தாங்கி கோட்டாட்சியர் கலந்துகொண்டு வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் இந்தப் பகுதியில் டிராக்டர்கள் வைத்து விழிப்புணர்வு நடத்தினர் மணமேல்குடி தாலுகாவில் 100% வாக்களிக்க வலியுறுத்தி 100 டிராக்டர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணி பெரும் மருதூர் கடைவீதியில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அபிநயா கொடியசைத்து இதை துவக்கி வைத்தார் இதில் வட்டாட்சியர்கள் சிவகுமார் மார்ட்டின் உள்ளிட்ட அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வு பெரும் மருதூர் கடைவீதியில் ஆரம்பித்து பாண்டி பத்திரம் ஆவுடையார் கோவில் நான்கு வீதிகளையும் வளம் வந்து ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது இதை பார்த்து கடைவீதியில் நின்ற பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் வருகின்ற 23ஆம் தேதி வாக்களிப்போம் என்று உறுதி அளித்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக