பொன்னமராவதி அரசியலில் அதிரடி திருப்பம் – 100 இளைஞர்கள் ஒரே நாளில் திமுக பக்கம்!!


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அரசியல் சூழலை கிளறிய சம்பவமாக,மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய சுமார் 100 பேர் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.பொன்னமராவதி திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைவு விழா உற்சாகக் கடலாக மாறியது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.கவுன்சிலர் ராஜா மற்றும் பெரியார் நகர் இளையராஜா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவெக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் திடீரென திமுகவைத் தேர்ந்தெடுத்து இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.புதிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் எஸ். ரகுபதி கருப்பு-சிவப்பு கழகத் துண்டு அணிவித்து வரவேற்றார். இது திமுகவின் தரப்பு பலம் மேலும் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.நிகழ்வில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை வலிமையான அரசியல் வெளிப்பாடாக மாற்றினர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!