அரக்கோணம் சட்டமன்ற தொகுதியை பார்வையிட்ட NILABJA CHAUDHARY IPS !!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு Police Observer Tr.NILABJA CHAUDHARY IPS அவர்கள் இன்று 21.03.2026 அரக்கோணம் சட்டமன்ற தொகுதியை பார்வையிட்டார்.
ஆய்வின் போது அவர் அரக்கோணம் நகர காவல் நிலையம் சென்று தேர்தல் தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் உட்கோட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் RDO அலுவலகம் சென்று வாக்கு இயந்திரங்கள் வைக்கக்கூடிய Strong Room மற்றும் அதன் பாதுகாப்பை ஆய்வு செய்தார்.
பின்னர் CSI பள்ளி வளாகத்திற்கு சென்று அங்கு வாக்குசாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் இரட்டைக்குளம் சோதனை சாவடி சென்று போலீஸார் வாகனச் சோதனை செய்வதை கண்காணித்தார்.
ஜாபர் சித்திக், காவல் துணை கண்காணிப்பாளர், அரக்கோணம், இரமேஷ், RDO, அரக்கோணம், வெங்கடேசன், தாசில்தார், அரக்கோணம், மற்றும் காவல் ஆய்வாளர்கள். சிவக்குமார், அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், சந்திரகுமார், அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக