சு.ரவி MLA வை நேரில் சந்தித்த தமிழக மக்கள் கட்சி நிர்வாகிகள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு புதிய கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மற்றும் ஆதரவை தெரிவிக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறது அந்த நிலையில் அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் சு.ரவி எம்எல்ஏ வை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். இதற்காக தமிழக மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் புலியேந்திரன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் சசிகலா மாநில இளைஞரணி துணைத் தலைவர் நாதமுனி மாவட்ட மகளிர் அணி தலைவர் சுந்தரி நகரத் தலைவர் புவனேஸ்வரன் நகர ஆலோசகர் வினோத் இளைஞரணி செயலாளர் அருண் காவேரிப்பாக்கம் ஒன்றிய பொறுப்பாளர் தாமு நெமிலி ஒன்றிய செயலாளர் ரஞ்சித் நெமிலி ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக