தேர்தல் நடத்தை விதிகளின்படி (MCC) மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளைத் துணிகொண்டு மறைக்க வேண்டிய அவசியமில்லை தேர்தல் ஆணையம்!!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி (MCC) மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளைத் துணிகொண்டு மறைக்க வேண்டிய அவசியமில்லை எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட மறைந்த முன்னாள் முதல்வர்களின் சிலைகளை அதிகாரிகள் துணிகொண்டு மறைத்தனர். இது குறித்து அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என்றும், உயிருடன் இருக்கும் அரசியல் தலைவர்களின் படங்கள், கட்-அவுட்கள் மற்றும் சிலைகளை மட்டுமே தேர்தல் முடியும் வரை மறைத்து வைக்க வேண்டும் என்றும் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக