KYC புதுப்பிக்கவில்லை என்றால் PNB கணக்குகள் மூடப்படலாம்!!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களின் செயல்பாடின்றி உள்ள (inoperative) கணக்குகள் மூடப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கியின் அறிவிப்பின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத கணக்குகள் செயல்பாடின்றி உள்ளதாக கருதப்படும். இத்தகைய கணக்குகளை ஏப்ரல் 15, 2026க்கு முன் KYC விவரங்களை புதுப்பிக்கவில்லை என்றால், அவை மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை செயல்பாட்டில் வைத்திருக்க, KYC புதுப்பித்தல் மற்றும் குறைந்தபட்சமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக