இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் (ITBP)கலந்தாய்வு கூட்டம்!!
இன்று (12.03.2026) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின், இ.கா.ப., அவர்கள் தலைமையில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் (ITBP) ஆலோசனை கூட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன மேலும் தேர்தல் பணிகள் முழுமையாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்ற சூழலை உருவாக்கவும், மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன், (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனகராஜ், (இராணிப்பேட்டை உட்கோட்டம்), காவல் அதிகாரிகள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புபடை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக