கோவையில் நடைபெறும் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சியின் துவக்க விழா!!
கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கமான சைமா சார்பில், சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியானது மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, நடைபெறுகிறது. கண்காட்சியை ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர் அஷ்வின் சந்திரன் தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கினார். மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் இயக்குனர் சுரேஷ் பாபுஜி மற்றும் ஷலீன் தோஷ்னிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து சைமா துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் இக்கண்காட்சி குறித்து கூறுகையில், டெக்ஸ்ஃபேர் 2026 கண்காட்சியில், 240 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும், சில யூனியன் பிரதேசங்களிலிருந்தும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 258 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த கண்காட்சியில்
சைமா தலைவர். துரை பழனிசாமி, சைமா துணைத் தலைவர். கிருஷ்ணகுமார், இந்திய டெக்ஸ்டைல் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர். கனகராஜ், சைமா இணை தலைவர். சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக