நத்தம் மாரியம்மனுக்கு மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு திருச்சி வாழ் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட சீர்வரிசை!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்ட வரம் அருளும் மாரியம்மன் திருக்கோவில் மாசி பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக தினமும் பால் குடங்கள் வருகையும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில வருடங்களாக நத்தத்தில் இருந்து திருச்சிக்கு குடி பெயர்ந்த பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா வரும்பொழுதுசீர்வரிசையாக சேலைகள். வளையல்கள் பூக்கள் மாலைகள் அபிஷேக பொருட்கள் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாரியம்மனுக்கு சீர்வரிசைகளை தந்து அபிஷேக அலங்காரங்களை செய்து வழிபட்டு அன்னதானம் செய்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!