திருவருள் பேரவை சார்பாக நடைபெற்ற ரமலான் | பண்டிகை வாழ்த்தரங்க விழா!!

 புதுக்கோட்டை  மாவட்டம்,  அனைத்து  சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமய நல்லிணக்க, சமூக ஒற்றுமை மேம்பாட்டிற்காக வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுவருகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவருள் பேரவை சார்பாக இஸ்லாமிய  நண்பர்களுக்கு வாழ்த்துவதற்காக ஈத்கா அரபி கல்லூரி வளாகத்தில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள். 

புதுக்கோட்டை டவுன் அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் லியாகத் அலி  அனைவரையும் வரவேற்றார். திருவருள்  பேரவை தலைவர் டாக்டர் சலீம்  தலைமை ஏற்றார், செயலாளர் சந்திரசேகரன்,  முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் முகமது அசரப்  அலி, பேராசிரியர் விஸ்வநாதன், சிவா என்கிற தியாகராஜன், துணை செயலாளர் முருகையன், மாவட்ட வர்த்தக கழக செயலாளர் எஸ் . கதிரேசன் , முன்னாள் கழகம் தலைவர் சேவியர், கழக நிர்வாகிகள் சவரிமுத்து,  ராஜா முகமது,  வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் ரோட்டரி சங்கம் சார்பாக ஆரோக்கியசாமி, ராமுக்கண்ணு, நிலவை பழனியப்பன், ஆறுமுகம், உத்தமன் மற்றும் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாநகர மன்ற உறுப்பினர்கள் ராஜா முகமது, ஜாகீர் உசேன் கலந்து கொண்டனர். ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜா, புதுக்கோட்டை தமிழ் சங்கம் சார்பாக கவி. முருகபாரதி, பீர் முகமது, புதுகை புதல்வன் கண்ணதாசன் மற்றும்  ஏ எம் சரீப், விவசாய சங்க தலைவர் தனபதி, கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்வேறு பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் இமாம்கள் ஜமாத்தார்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  திருவருள் பேரவை ஆலோசனை குழு உறுப்பினர் ஜெ . ராஜா முகமது நன்றி கூறினார். நிகழ்ச்சியை புதுக்கோட்டை டவுன் அனைத்து ஜமாத் கமிட்டி துணை செயலாளர் சையது இப்ராஹிம் பாபு தொகுத்து வழங்கினார் .

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!