திருமயத்தில் அமைச்சர் ரகுபதிக்கு உற்சாக வரவேற்பு!!
திருமயம் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் ரகுபதி அறிவிக்கப்பட்டு முதல்வரிடம் வாழ்த்துப்பெற்று நேற்று மாலை திருமயம் வந்தார்.அவருக்கு நகர எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரகுபதி, கோட்டை, பைரவர் கோயில்,சிவன்,பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்தார்.பின்னர் அவர் ஸ்டேட் பாங்க் ரோடில். இருந்து திமுக அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். வழி நெடுக தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் திருமயம் தொகுதி மக்களின் 95 சதவீத கோரிக்கைகளை,அடிப்படைத்தேவைகளை மனநிறைவுடன் செய்துள்ளேன். வேந்தன்பட்டி,குழிபிறை,கடியாபட்டி ஆகிய ஊர்களில் புதிதாக துணை மின் நிலையங்கள் வர ஏற்பாடு செய்துள்ளேன். திருமயம்,அரிமளம்,பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியங ் களுக்கு,புதிய கட்டடங்கள், திருமயம் பேரூராட்சி,பொன்னமராவதி நகராட்சி என தரம் உயர்த்தியுள்ளேன். நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகம் வரலாறு காணாத வகையில் 13.9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல. ஜவுளி உற்பத்தியி்ல் தமிழகம் குஜராத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதற்கு நம் முதல் வர் ஸ்டாலின் தான் காரணம். என்றார். முன்னாள் காங்.எம்எல்ஏ ராம.சுப்புராம், திமுக ஒன்றிய செயலர்கள் சிதம்பரம்,கணேசன்,ராமலிங்கம், வட்டார காங் தலைவர்கள் முருகேசன்,கணேசன்,திமுக பொருளாளர் வேங்கையரசன்,பேரையூர் பாலு, குல மங கலம் பழனிவேலு,சிபிஐ எம் ஜீவானந்தம்,வி.சி , உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக