அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களை திடீரென நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அச்சுறுத்தி வீடுகளை எடுக்க முயலும் மனிதநேயமற்ற செயலை கண்டித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தமிழக அரசு தனி விசாரணைக்கு குழுவை அமைத்து கள ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் மாற்று வசதி இல்லாமல் எந்த குடும்பத்தையும் வெளியேற்றக் கூடாது பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை முன்னாள் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக