தரமற்ற சாலை அதிகாரிகள் மௌனம், மக்கள் அதிருப்தி!காங்கிரீட் ஜல்லி இல்லாமல் ஏரி மண் பயன்படுத்தல் – “இப்படித்தான் பணி” என்ற ஒப்பந்ததாரர் பதில் -சர்ச்சை!!

கடலூர் மாவட்டத்தில் பெருமுளை முதல் ஆவட்டி வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலை அமைக்கும் அடித்தளத்தில் தேவையான காங்கிரீட் ஜல்லி பயன்படுத்தப்படாமல், வெறும் ஏரி மண் கொட்டி அதன் மீது ஜல்லி போட்டு பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் சாலை ஒரு அல்லது இரண்டு மாதங்களுக்குள் சேதமடையும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, “இப்படித்தான் பணிகள் நடைபெறும்” என அவர் உரிமையுடன் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த பதில் பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தரமான முறையில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

“மக்கள் பணம் வீணாகாமல், தரமான சாலை வேண்டும்” பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!