ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு நிர்வாகிகளுடன் விருப்ப மனு அளித்தார்! அமைச்சர். சிவ. வீ. மெய்யநாதன்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர். மு. க. ஸ்டாலின், மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துக்களோடும், கழகத் தோழர்கள் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மக்களின் ஆதரவோடும்
வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 182- ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு கழகத் தோழர்கள் தொகுதி நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் நிர்வாகிகளிடம் பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை அமைச்சர். சிவ. வீ. மெய்யநாதன் விருப்ப மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக