இரவோடு இரவாக திரும்பிய தேனி மாவட்ட ஹாக்கி வீரர்கள்!!


மாநில சப் ஜூனியர் போட்டியில் கலந்து கொள்ள தேனி மாவட்ட ஹாக்கி விளையாட்டு கழகம் அனுமதி பதிவு செய்யப்படாததால் - போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் இரவோடு இரவாக திரும்பிய தேனி மாவட்ட ஹாக்கி வீரர்கள். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தவிர்த்துவிட்டு போட்டிக்கு சென்றும் விளையாட முடியாததால் வீரர்கள் வேதனை. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சப் ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஹாக்கி அசோசியேஷன் அணிகள் போட்டியில் கலந்து கொள்கின்றனர் இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேனி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் சார்பில் சுமார் 15க்கும் மேற்பட்ட சப் ஜூனியர் மாணவர்கள் பயிற்சியாளர் உடன் நேற்று இரவு ராமநாதபுரத்திற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது மாநில போட்டியில் கலந்து கொள்வதற்கு தேனி ஹாக்கி கழகத்திலிருந்து அனுமதி பதிவு செய்யப்படவில்லை என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்க இட வசதி இல்லாமல், உணவின்றி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் இரவோடு இரவாக தேனிக்கு திரும்பியுள்ளனர்.

இந்தப் மாநில போட்டிக்காக கடத்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களை தயார் படுத்தி வந்ததாகவும், இதில் கலந்து கொண்டு இருந்தால் தங்களது மாணவர்கள் தமிழக அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும், ஆனால் தேனி மாவட்ட ஹாக்கி கழக தலைவர் சங்கிலி காளை தங்களுக்கு முறையாக எந்த தகவல் கொடுக்காததால் தங்களால் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதா பயிற்சியாளர் புகார் தெரிவித்தார், தேனி மாவட்டம் ஹாக்கி கழக தலைவர் சங்கிலி காளையை மாற்றி தங்களை ஆதரிக்கும் வேறு தலைவர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வை கூட எழுதாமல் ஒரு சில மாணவர்கள் வருகை தந்தனர் ஆனால் தங்களுக்கு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி பதிவு செய்யப்படவில்லை என கூறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தங்குமிடம் உணவு வசதி கூட கிடைக்காமல் அவதி அடைந்தோம் என ஹாக்கி வீரர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்தனர்.

போட்டி 

1.கிஷோர் (பயிற்சியாளர்) 

2. ஹோம்நாத் குமார் (ஹாக்கி வீரர்)

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!