நத்தம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள லிங்கவாடி- வீமபுரியைச் சேர்ந்தவர் தங்கையா மனைவி பழனியம்மாள் (65). இவர் தென்னை ஓலையில் கிடுகு பின்னும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் லிங்கவாடி பிரிவு வீமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கடக்க முயன்றுள்ளார்.  அப்போது மதுரையை சேர்ந்த மீரா மைதீன் மகன் அப்துல் ஜபார் (31) என்பவர் நத்தத்தில் இருந்து மதுரை நோக்கி ஓட்டி வந்த சொகுசு கார் மூதாட்டியின் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். இறந்தவர் உடலை கைப்பற்றிய நத்தம் போலீஸார் உடல் கூற் ஆய்விற்காக  நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை நத்தம்  போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!