குடியாத்தத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் அதி நவீன பேருந்து முகாம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் ரோட்டரி சங்கம்,அத்தி மருத்துவமனை, நெஞ்சிற்கினிய நண்பர்கள் குழு இணைந்து குடியாத்தம் கௌதம் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் அதி நவீன பேருந்து முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர். கே. சந்திரன் தலைமை தாங்கினார்.கே.எம். ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர். கே.எம்.ஜி. ராஜேந்திரன், அத்தி மருத்துவமனை குழு தலைவர் டாக்டர். பி. சௌந்தரராஜன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர். ஜே. கே.என்.பழனி, வழக்கறிஞர். கே.எம். பூபதி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
நகர மன்ற உறுப்பினர். கற்பகம் மூர்த்தி,கஸ்பா. ஆர். மூர்த்தி, மருத்துவ குழுவினர் முகாமிற்கான ஏற்பாடுகளை கவனித்தனர்.ரோட்டரி முன்னாள் தலைவர்கள். என்.சத்தியமூர்த்தி, பி. எல்.என்.பாபு, சி.கே. வெங்கடேசன், சி. கண்ணன்,டி.எஸ். ரவிச்சந்திரன்,எம். ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நெஞ்சிருக்கும் இனிய நண்பர்கள் குழு டாக்டர்.ஏ.கென்னடி,எம்.சிவராஜ்,வி.மதியழகன் ஆகியோர் செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக