குடியாத்தம் அருகே எஸ்சி எஸ்டி வழக்கு கொடுத்ததில் முன்விராத காரணமாக கூலி தொழிலாளி அடித்துக் கொலை!!

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டம்,  கருணீகசமுத்திரம் கிராமத்தில் வசித்து வரும்  செல்வம் த/பெ தாமோதரன் (சுமார் 55 வயது- இருளர்) என்பவர் விக்ரம் கார்டன் அருகே மது அருந்தி கொண்டிருந்த போது மேற்கண்ட பகுதியில் வசித்து வரும்  ரோஷன் பாபு த/பெ முனிரத்தினம்(சுமார் 40 வயது- கம்மவார்) என்பவர் நேற்று (08.03.2021) இரவு 8 மணியளவில் .. செல்வம் என்பவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டதாக கிராம விசாரணையில் தெரியவருகிறது.இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சுமார் 50 காவலர்கள் விரைந்து வந்து ரோஷன் பாபுவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இறந்த நபரான 

செல்வம் என்பவரது உடலானது உடற்கூறாய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறந்த நபருக்கு சித்ரா என்ற மனைவியும் தமிழ்ச்செல்வன்,அருள் என்ற இரு மகன்களும் உள்ளனர். இது சம்பந்தமாக மேல்பட்டி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து

ரோஷன் பாபுவை கைது . விசாரணை மேற்கொண்டு . வருகிறார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!