சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற ஓ. பன்னீர்செல்வம்!!
தமிழ்நாடு 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், இன்று (23.03.2026), தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான நா.ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கம்பம் சட்டமன்றத் தொகுதி, சின்னமனூர், கவிதா தாமோதரன் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பரப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக