விளாத்திக்குளம் மாணவி வழக்கில் ஒருவர் கைது!!
விளாத்திக்குளம் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவர் கைது.
மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்துபோனதாக போலீசார் தகவல்.
கைதான தர்ம முனீஸ்வரன், 2020இல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
தர்ம முனீஸ்வரன், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக