குடியாத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!
வேலூர் மாவட்டம்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர். டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் தனியார் கட்டிடத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் குடியாத்தம் நகரக் கழகச் செயலாளராக K.N.சம்பத்குமார் அவர்களை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க நிர்வாகிகள் அனைவரும் முன்மொழிந்தனர்.
இந்தக் கூட்டத்தில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் Mk.பூபாலன், பேரணாம்பட்டு நகர கழக செயலாளர். சுரேஷ், குடியாத்தம் நகர பொருளாளர். நவ்ஷாத், நகர இணை செயலாளர். கார்த்திகேயன், நகர துணைச் செயலாளர் பிச்சுமணி
.வர்த்தக அணி மாவட்ட செயலாளர். ஹேமந்த் ஷர்மா வார்டு கழகச் செயலாளர்கள். ஜெயபிரகாஷ், ராஜேஷ், தீன தயாளன், காதர், தனஜெயன், ஜெகதீசன், ஆனந்த், கோடீஸ்வரன், ஜீவா, தினேஷ்குமார், பஞ்சாட்சரம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக