சேத்தியாத்தோப்பு தனியார் பள்ளியில் நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு!!
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மனோ வித்யாலையா பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்புநிலையஅலுவலர்.உத்ராபதிதலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பள்ளியின் நிறுவனர். எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீ குறித்த விளக்கமும் தீயினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது பின்னர் வினா விடை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக