மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி கண்டெடுப்பு: தவறுதலாக சுட்டதில் இளைஞர் காயம்!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள அய்யாபட்டியை அடுத்தயுள்ள பெரியகோம்பைட்டியைச் சேர்ந்த யுவராஜா, அவரது தம்பி சதீஷ்குமார் (19) மற்றும் உறவினர் சக்திவேல் (19) ஆகிய மூவரும் தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியகோம்பைட்டியை அடுத்த சிறுமலை அடிவாரப் பகுதியில் புளியம்பழம் பறிக்கச் சென்றிருந்தனர்.

அப்போது, ஒரு மரத்தடியில் பார்சல் போன்று ஏதோ ஒன்று கிடப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தபோது, அதில் துணியால் சுற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்க இருந்தது தெரியவந்தது. அதை எடுத்த சதீஷ்குமார், சுட முயற்சி செய்தபோது, தவறுதலாக அதிலிருந்த பால்ரஸ் குண்டுகள் அருகில் நின்ற யுவராஜாவின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் பாய்ந்தன.வலியால் அலறிய யுவராஜாவை உடனடியாக திண்டுக்கல் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமார் மற்றும் சக்திவேலை விசாரித்ததோடு, அவர்கள் காட்டிய இடத்தில் இருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சாணார்பட்டி ஆய்வாளர் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!