அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்!!

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்!

மீனவர்கள் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு 

ரூ.25 லட்சம் இழப்பீடு.

அரசு நிலங்களில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், காட்சி ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவி தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்

1) குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்.

2) ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி.

3) மகளிக்கு மாதம் ரூ.2000 ஊக்கத் தொகை

4) 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 வழங்கப்படும்.

5) முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்

6) வீடற்ற குடும்பங்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

7) முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயில 1% இடஒதுக்கீடு.

8) ஊரக வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.

9) வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10) பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

11) தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 உதவித்தொகை (ஒருமுறை மட்டும்)

குல விளக்கு திட்டத்தின்கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,000

நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

சிறுபான்மையினர் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்.

ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்பத்துக்கும் ஒரு முறை ரூ.10,000.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000.

12-ம் வகுப்பு படித்துவிட்டு பதிவு செய்த வேலையில்லாதோருக்கு மாதம் ரூ.1,000.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!