அரக்கோணம் அதிமுக வேட்பாளர். சு.ரவி கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்டினார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கபட்டார் இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் முக்கிய பிரமுகர்கள் கூட்டணி கட்சியினர் என பலரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தொடங்கினார் அந்த வகையில் ஏசிஎஸ் கட்சி நிர்வாகிகளை அவர்களது அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி எம்.எல்.ஏ இன்று இரவு நேரில் சந்தித்தார். அப்போது நகர தலைவர் பூக்கடை.சாய் வரவேற்று சால்வ அணிவித்தார் பின்னர் தாங்கள் அமைச்சராக வர வேண்டும் என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது நகர செயலாளர். பாண்டுரங்கன் மற்றும் ஏசிஎஸ் கட்சி நிர்வாகிகள் முருகவேல் கோபி வேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக