தமிழக பாஜக தலைவர். நயினார் நாகேந்திரன் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் இணைந்து கிரிவலம்!!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் இணைந்து கிரிவலம் சென்றார். 

கிரிவலத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூணில்' கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்று வலியுறுத்தினார். கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின் போது இந்தத் தூணில் தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டதும், அதை எதிர்த்துப் போராடியபோது நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நீதிமன்றத் தீர்ப்புகள் தீபம் ஏற்ற சாதகமாக வந்துள்ள நிலையில், உலக அமைதி மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்காக வேண்டி இந்தச் சிறப்பு கிரிவலத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!