திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக நிர்வாகி இல்ல திருமண விழா! பொன்முடி எம்.எல்.,ஏ., விசாலாட்சி பொன்முடி பங்கேற்பு!!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்திலிங்கமடம் திப்பரசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் திமுக கிளை செயலாளர் அஸ்வத்தாமன். இவரது மனைவி விமலாதேவி ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர்களது இல்ல திருமண விழா திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எல்.எல்.ஏ., அவரது துணைவியார் விசாலாட்சி பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் கெஜலட்சுமி-கணேஷ் ஆகியோரை வாழ்த்தினர். இதில் ஜெயச்சந்திரன், தங்கம், பி.வி.ஆர்.விசுவநாதன், கை.ரா.சடகோபன், ஓம்சிவசக்திவேல், ராயல் அன்பு, பூக்கடை கணேசன், செல்வராஜ், பக்தவச்சலம், சதிஷ்குமார், நிர்மல்ராஜ், பாலாஜி பாபு, டாக்டர்.காவியவேந்தன், சுந்தரமூர்த்தி, சிவக்குமார், மோகன், ஏழுமலை, வெங்கடேசன், கிருஷ்ணராஜ், குமரவேல், உதயசூரியன், பிரபாகரன், வினோத் புகழேந்தி, சிவ.தங்கபாண்டியன், நவீன், தல.சித்தா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக