அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இப்த்தர் நோன்பு!!
புதுக்கோட்டை மாவட்டம்,உலகம் முழுவதும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் மத நல்லிணக்க இப்த்தர் நோன்பு வர்த்தக சங்க கட்டிடத்தில் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை நடத்தி திறந்தனர்.
நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை செயலாளர் சுரேஷ் குமார் பொருளாளர் ஹாரீஸ் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் வர்த்தக சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக