மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு!!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026ன் போது, வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாத  நிலையில் உள்ள அதாவது 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும்    40%க்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில்  இந்திய தேர்தல் அணையத்தின் அறிவுறுத்துதலின்படி  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றம் தொகுதி வாரியாக   85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு.

எண் சட்டமன்ற தொகுதி 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள்

038 அரக்கோணம் 1055 2112

039 சோளிங்கர் 1773 2872

041 இராணிப்பேட்டை 1218 1772

042 ஆற்காடு 1705 2592

மொத்தம் 5751 9348

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேற்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40%க்கு மேல்  உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரிடம், தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைக் கோரும் விண்ணப்பப் படிவம் (படிவம் 12D) அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று  வாக்குசாவடி நிலை அலுவலர் (BLO) மூலம் 18.03.2026 முதல் வழங்கப்பட உள்ளது. 

வீடு தேடி மேற்படி படிவத்தை கொண்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், மேற்குறிப்பிட்ட நபர்கள் தங்களது வாக்குகளை, தபால் வாக்குமூலம் வீட்டில் இருந்தபடியே செலுத்துவதற்கான தங்களின் விருப்பத்தினை விண்ணப்ப படிவத்தில் (படிவம் 12D)   பூர்த்தி செய்து வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நபர்கள் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்த பின்னர் அல்லது தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துவிட்டு தபால் வாக்குமூலம் வாக்கு செலுத்தாதவர்கள், பின்னர் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க இயலாது.

மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை பெற விண்ணப்பிக்கும் போது, தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 12D படிவம் பெற தகுதிவாய்ந்த மருத்துவரால் அளிக்கப்பட்ட சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் முதல்முறை வீடு தேடி வரும் போது, வாக்காளர் வீட்டில் இல்லை எனில் மறுமுறை அவ்வீட்டிற்கு மீண்டும் சென்று வாக்காளரிடம் 12D படிவத்தினை பூர்த்தி செய்து அவரது விருப்பத்தினை பெறுவார். வாக்குச்சாவடி நிலை அலுவலர் இருமுறையும் செல்லும்போது வாக்காளர் வீட்டில் இல்லை எனில் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பமற்றவர்கள் என கருதப்படும்.

விருப்ப மனுவை அளித்துள்ள  வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!