மதுரை பாண்டியன் அப்பளம்” நிறுவனத்தை, நேரில் சென்று பார்வையிட்ட பேராசிரியர். இராம. ஸ்ரீ நிவாசன்!!

மதுரை மாவட்டம், மதுரையில் செயல்பட்டு வரும் “மதுரை பாண்டியன் அப்பளம்” நிறுவனத்தை,பேராசிரியர்  இராம ஸ்ரீநிவாசன், மாநில பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.அப்பளம், வடகம், மோர்வத்தல் போன்ற பாரம்பரிய சிறு மற்றும் குடிசை தொழில்களில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிதி, தொழில்நுட்ப, சந்தை மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து அவர் தொழில்துறையினரிடம் கேட்டறிந்து, விரிவான கலந்துரையாடல் நடத்தினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு, தொழில்துறையின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அரசின் ஆதரவு தேவைகள் குறித்து விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 

அந்த மனுவில்,சர்வதேச தரத்தை உறுதி செய்ய நவீன ஆய்வகம் (Lab) அமைத்தல்,,

உலக சந்தையுடன் இணைக்கும் ஏற்றுமதி மையம் (Export Hub) உருவாக்கம்,

சிறு தொழிலாளர்களுக்கு எளிய கடன் வசதிகள் வழங்குதல்

அரசு சார்பில் நிதி உதவி, மானியம் மற்றும் ஊக்கத் திட்டங்களை விரிவுபடுத்துதல்,,

Directorate General of Foreign Trade-இன் Joint Director General அவர்கள் மீண்டும் மதுரைக்கு வர ஏற்பாடு செய்தல்,

என பல முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும், பாரம்பரிய அடிப்படையில் இயங்கி வரும் இத்தொழிலை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசின் துரிதமான நடவடிக்கை அவசியம் என சங்கம் தெரிவித்தது.

இந்த கோரிக்கைகளை உரிய துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் திருமுருகன் தலைமையில்  சங்க நிர்வாகிகள், தொழில்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!