அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்போது? என்ன சிக்கல்? யாருக்கு எவ்வளவு?

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 17 தொகுதிகள், டிடிவி தினகரனின் அமமுகக்கு 9 தொகுதிகள், தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 170 இடங்களில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த 64 தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றைத் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகள் புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும், சில சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு தாமதமாகியுள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!