அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் 100 நாள் வேலை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் செய்தனர். நகர்ப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவு படுத்தி நகர மக்கள் நலனை மேம்படுத்திட கோரிக்கையும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டியும் இடதுசாரி கட்சிகளின் முழு முயற்சியால் 2006 கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தை நீக்காதே கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோமதி மாவட்ட துணை செயலாளர் தலைமையில் சிறப்பு பேச்சாளர். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநில செயலாளர். கண்ணகி உட்பட ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக