ஆவுடையார் கோவில் கடைவீதியில் தேர்தல் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிமாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் கடைவீதியில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமையிலும் அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையிலும் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு, கிராமிய கலை நிகழ்ச்சி கரகாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் கட்டைக்கால் ஆட்டம் ஆகியவற்றின் மூலம் பொது மக்களுக்கு ஆவுடையார் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு  துண்டு பிரசுரம் கொடுத்து அந்த சாலையில் சென்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் வருவாய்த் துறையினர் ஊரக உள்ளாட்சித் துறையினர் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!