அரக்கோணம் தி டவுன்ஹாலில் அன்னதானம்! பொது செயலாளர் டாக்டர். பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் அரசு பொது மருத்துவமனை எதிரில் டவுன் ஹால் உள்ளது இந்த டவுன்ஹால் நிர்வாகம் சார்பில் வாரம் தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை சிறப்பாக நடத்தி வருகிறது அந்த வரிசையில் 30வது வாரம் நடைபெற்ற அன்னதானம் முன்னாள் செயற்குழு உறுப்பினர் பி.காசி விஸ்வநாதன் குடும்பத்தார் பங்களிப்பில்  நடைபெற்றது இந்த அன்னதானத் திட்டத்திற்கு டவுன்ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தலைமை தாங்கினார் பொது செயலாளர் டாக்டர். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்  இதில்   டவுன்ஹால் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் அன்னதானம் வழங்கினார்கள் இந்த திட்டத்தினை வரவேற்கும் வண்ணம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்  சமூகப் பொறுப்பாளர் முருகவேல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து அனைவரை வரவேற்றார் டவுன் ஹால் மேலாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட   அனைவருக்கும் இறுதியில் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!