மதுரை இளைஞர் சமூக நல அறக்கட்டளை சார்பாக மஹபூப்பாளையம் திருவள்ளுவர் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!!
மதுரை இளைஞர் சமூக நல அறக்கட்டளை சார்பாக மஹபூப்பாளையம் திருவள்ளுவர் பள்ளிக்கூட வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி, இளைஞர் சமூக நல அறக்கட்டளை அறிமுக விழா உலக மக்கள் அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை என முப்பெரும் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் எ.சையது தமீமுல் அன்சாரி அவர்கள் தலைமையேற்றார்கள்.ஜே ஏ எம் மகளிர் அரபுக் கல்லூரியின் நிறுவனர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி எஸ் எம் அல்தாப் அலி உலவி நிகழ்ச்சியின் நெறியாளராக கலந்து கொண்டார். மதுரை மஹபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் கண்ணியமிகு இன்ஜினியர் எஸ்.நிஜாம் அலிகான் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மதுரை மஹபூப்பாளையம் பள்ளிவாசல் துணை இமாம் மௌலானா மௌலவி எம் அபுதாஹீர் யூசுபி அவர்கள் கிராஅத் ஓதினார். இளைஞர் சமூக நல அறக்கட்டளையின் செயலாளர் பி. சவுதி ஷேக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் இளைஞர் சமூக நல அறக்கட்டளையின் உறுப்பினர் எ.ஷேக் அப்துல்லா B. Com (CA) துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட அரசு காஜி மதுரை ஜே எம் எஸ் அரபுக் கல்லூரியினுடைய தலைவர் மௌலானா மௌலவி சபூர் முஹைதீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் எஸ். எ. லியாகத் அலி
தலைவர்.முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்டம், எ.ஷேக் அப்துல் சத்தார் (எ) ஆம்புலன்ஸ் ஷேக் செயலாளர். முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்டம், எஸ். முகமது பாரூக் மைதீன் பொருளாளர். முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்டம்,Vr. எ. அபுதாஹிர் (TCHP)பாரம்பரியம் வைத்தியர்.மௌலானா மௌலவி எம்.ஷூஜா அஹமது ஸஅதி பாஜில் மன்பஈ அறங்காவலர் JAM மகளிர் அரபிக் கல்லூரி மதுரை நன்றியுரை இளைஞர் சமூக நல அறக்கட்டளை உறுப்பினர்.ஹ. அப்துல் பக்கீர் அலி இந்நிகழ்வில் 350 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் உலக மக்கள் அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக