மங்களூர் தெற்கு ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை செயலாளராக பாண்டியன்(எ) ராஜீவ்காந்தி நியமனம்! நிர்வாகிகள் வாழ்த்து!!
கடலூர் மாவட்டம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்களூர் தெற்கு ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை ஒன்றியச் செயலாளராக பாண்டியன் (எ) ராஜீவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர். திருமாவளவன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர். பாலமுருகன் பரிந்துரையின் பேரில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாண்டியன் (எ) ராஜீவ்காந்தி கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக பல்வேறு போராட்டங்கள் மற்றும் சமூகநல நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். பல போராட்டங்களில் கலந்து கொண்டு வழக்குகளையும் சந்தித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து, கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக