தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், மூன்று வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகளில், மூன்று வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
*அதிமுகவில் மனைவி:* லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அவருக்குத் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது.
*தவெகவில் மருமகன்:* நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுச்செயலாளராக இருக்கும் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.
*சொந்தக் கட்சியில் மகன்:* புதுச்சேரி அரசியலில் தடம் பதித்துள்ள மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 'லட்சிய ஜனநாய கட்சி' (LJK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி, காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் துருவங்களில் நின்று தேர்தலைச் சந்திப்பது, இந்த 2026 தேர்தலின் சுவாரசியமான மற்றும் விவாதத்திற்குரிய அம்சமாக மாறியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக