திருவண்ணாமலை அருகே மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் செங்கம் நகர ஒன்றிய மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தலைமையில், மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு, மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பிட வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக