நத்தத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மதினாநகரில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் நத்தம் நகர தலைவர் முகமது அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார்.கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்துல் அகது,நகர செயலாளர் முகமது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர். ஆண்டிஅம்பலம்,திமுக ஒன்றிய செயலர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, ரத்தினகுமார், திமுக நகர செயலர் ராஜ்மோகன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குழந்தைவேல்,சின்னகருப்பன்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனியப்பன்,தமிழர் தேசம் கட்சியை சேர்ந்த பூமிஅம்பலம்,மமக மாவட்ட செயலார் யாசர் அரபாத் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன்  உள்ளிட்ட நிர்வாகிகள் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!