நத்தம் பகுதிகளில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஊர்வலம்!!
நத்தம் பகுதிகளில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறை கடைபிடித்தனர். இதையொட்டி நத்தம் புனித ராயப்பர் ஆலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பங்கு தந்தைகள் டோமினிக் சேவியர், ஜெரால்டு ஸ்டீபன் செல்வா உள்ளிட்டோர் தலைமையில்
நடந்த இந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தென்னங்கீற்றுகளால் ஆன ஓலையை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், ஆராதனைகளும் நடந்தது. பின்னர் சிலுவையை கையில் ஏந்திய கிறிஸ்தவ மக்கள் இயேசுநாதர் பாடல்களை பாடியபடி சென்றனர். இதேபோல் செந்துறை பங்கில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அங்கும் ஊர்வலம் சென்றனர். ஆலயத்தில் இருந்து தென்னங்கீற்றுகளால் ஆன ஓலையை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கிறிஸ்தவர்கள் சென்றனர்.
படவிளக்கம் : நத்தத்தில் புனித ராயப்பர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக