காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்ணென்ய் பாட்டில் குண்டு வீச்சு!!
பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில்,சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 1ம் வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்
மண்ணென்னெய் நிரப்பிய பாட்டிலை வாசல் அருகே வீசி சென்றுள்ளார்.
பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் காலையில் அலுவலக காவலாளி பாட்டில் சிதறல்களை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் வந்த போலீசார் பாட்டில் குண்டு வீச்சு குறித்து காவலாளி ஆண்டியப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சம்பவ இடம் வந்து நிகழ்வு குறித்து காவலாளிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக