மணியம்பள்ளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ அடைக்கலம் காத்தார் ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஸ்ரீ முனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா மணியம்பலம் கிராமத்தில் மணியம்பலம் கிராம பொதுமக்களாலும் இளைஞர்களாலும் நடத்தப்படும் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ அடைக்கலம் காத்தார் அருள்மிகு சங்கிலி கருப்பர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல் கால பூஜை யானது கணபதி ஹோமம் கோமாதா பூஜை லட்சுமி பூஜை இரண்டாம் கால பூஜை இன்று நிறைவுபெற்று கால பூஜை கோ பூஜை பூர்ணகுதி பூஜை நடைபெற்ற முடிந்து.அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் மேள தாளம் முழங்க சரியாக ஒன்பது மணி அளவில் ஸ்ரீ அருள்மிகு அய்யனார் ஆலய கோபுரத்தில் கருட பகவான் வட்டமிட்டு புனித கலச நீர் ஊற்றப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கனக்கான பக்தர்கள் பகலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் மற்றும் தொடர்ச்சியாக மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக