வைகை ஆற்றை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை – வைகை காவலன் குருசாமி          மதுரையில் ஸ்டார் குரு சேரிட்டபிள் பவுண்டேஷன் சார்பாக, மதுரை வைகை ஆற்றை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சுத்தம் செய்து வரும் வைகை காவலன் குருசாமி, ஆற்றை அழகுபடுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். வைகை ஆற்றில் காணப்படும் ஆகாய தாமரைகளை அகற்றுதல், படித்துறைகளை சுத்தம் செய்தல், வர்ணம் தீட்டுதல், பூத்தொட்டிகள் அமைத்தல் மற்றும் சிசிடி கேமராக்கள் பொருத்துதல் போன்ற பணிகள் மூலம் ஆற்றின் அழகை மேம்படுத்தி வருகிறார். இந்நிலையில், சில சமூக விரோதிகள் இந்த சேவையின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், படித்துறைகளில் வைக்கப்பட்டுள்ள பூத்தொட்டிகளை தொடர்ந்து சேதப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வைகை காவலன் குருசாமி கூறுகையில், “சேதப்படுத்தியவர்களை தற்போது கண்டறிந்துள்ளோம். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!