மதுரை : திருப்பரங்குன்றம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா – ஸ்டார் குரு சேரிடபுள் பவுண்டேஷன் ஏற்பாடு!!

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக ஸ்டார் குரு சேரிடபுள் பவுண்டேஷன் சார்பில் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சுற்றுலாவில் மாணவர்கள் சிவகங்கை கீழடி அருங்காட்சியகம், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் மதுரை காந்தி மியூசியம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் மூலம் மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டி தமிழர் பாரம்பரியம், பண்டைய கால வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் குறித்து அறிய மாணவர்கள் காந்தி மியூசியத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே தேசிய உணர்வை வளர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இத்துடன், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஸ்டார் குரு மற்றும் 

ஸ்டார் குரு சேரிடபுள் பவுண்டேஷன் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!