நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!!

நாகர்கோவில் அருகே ரயில்வே கேட் கீப்பர் மற்றும் ஊழியர் பணியின் போது மதுபோதையில் மயங்கிக் கிடந்ததால், வந்தே பாரத் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்காக கேட் மூடப்பட வேண்டிய 'அலர்ட்' மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.

கேட் மூடப்பட்டதற்கான உறுதிப்பாடு கிடைக்காததால், பாதுகாப்பு கருதி வந்தே பாரத் ரயில் வள்ளியூர் அருகே சுமார் 7 நிமிடங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதிகாரிகள் நேரில் சென்று சோதித்த போது, கேட் கீப்பர் கொம்பையா மற்றும் ஊழியர் சரவணன் ஆகிய இருவரும் பணியின் போது மதுபோதையில் மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 பயணிகளின் பாதுகாப்பில் பெரும் கவனக்குறைவாக இருந்த இரு ஊழியர்களையும் ரயில்வே சீனியர் இன்ஜினியர் உடனடியாக சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்து உத்தரவிட்டார்.

ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயணிகளின் உயிரோடு விளையாடும் இத்தகைய செயல்கள் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!