நெமிலியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடிற்கு காரணமாக ஒன்றிய பாஜக அரசையும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளையும் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர்.பெ. வடிவேலு தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் நரேஷ் குமார், தமிழ்மாறன், கோகுல்நாத், நரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு ஒன்றிய பாஜக அரசின் தவறான வெளியுறவு கொள்கையே காரணம், மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது, கல்வி நிதி மற்றும் குடிநீர் நிதி வழங்காதது குறித்தும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் ஒன்றிய அரசானது தமிழகத்தை பல்வேறு நிலைகளில் வஞ்சித்து வருவதை சுட்டிக்காட்டி, குறிப்பாக கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க மறுப்பது, இந்தி திணிப்பை நடைமுறைப்படுத்த துடிப்பது உள்ளிட்ட தமிழகத்திற்கு செய்து வரும் பல்வேறு துரோகச் செயல்களை குறிப்பிட்டு நிர்வாகிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள். புருஷோத்தமன், முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், ஹரிகிருஷ்ணன், பாரதி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.






கருத்துகள்
கருத்துரையிடுக