மதுரை : ஆவின் பால் பாக்கெட்டில் மிதந்த கவர் பால் முகவர் அதிர்ச்சி!!
மதுரையில் S.S காலனி பகுதியில் உள்ள ஆவின் பால் டிப்போவில் ஆவின் பால் பாக்கெட் வாங்கி சென்ற மூதாட்டியின் பால் பாக்கெட்டில் மிதந்த பாலித்தீன் கவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில காலங்களாக ஆவின் பால் பாக்கெட்டில் பல குறைபாடுகள் எழுந்து வருகிறது. ஆவின் ஊழியர்கள் அதை யாரும் கண்டு கொள்ளவதில்லை. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஆவின் பால் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆவின் ஊழியர்கள் பால் உற்பத்தி செய்யும் போது கவன குறைபாடுகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். எந்த தவறுகளும் நடந்தால் பாதிக்கப்படுவது பால் முகவர்கள் மற்றும் அரசுதான் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .
ஆவின் பால் முகவர்களுக்கு சுத்தமான மற்றும் தரமான பால் கிடைக்க வேண்டும் மற்றும் ஆவின் ஊழியர்களின் அலட்சியத்தையும் சரி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆவின் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக