நத்தம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் மாசித்திருவிழா கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடந்து முடிந்தது. இக் கோயில் திருவிழாவில் சுற்று வட்டாரம் மற்றும் வெளிமாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயில் உண்டியல் திறக்கப்பட்டு வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது.இதில் தங்கம் 800 மில்லி கிராம், வெள்ளி 52 கிராம், ரொக்கம் ரூ.17 லட்சத்து 41 ஆயிரத்து 654-ம் இருந்தது. உண்டியல் திறப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் பாலசரவணன், திருக்கோயில் பூசாரிகள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் பேரவைக் குழுவினர் செயல்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக