நெல்லையில் அல்வா தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்!!

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகத் தனது அல்வா தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவூறும் சுவைக்குக் கேரண்டி தரும் இந்த நிறுவனம், தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் விறகுகளைப் பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை அல்வா பிரியர்கள் மீண்டும் அந்தத் தித்திக்கும் சுவையைச் சுவைக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!